படப்பிடிப்பு தளத்திற்கு 12கிமீ சைக்கிளில் சென்ற சூர்யா-கார்த்தி நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,January 13 2021]

சூர்யா நடித்த ’என்ஜிகே’, கார்த்தி நடித்த ’தேவ்’ மற்றும் ’தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் ரகுல் பிரீத்திசிங். தற்போது இவர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் பிரமாண்டமாக தயாராகி வரும் ’மே டே’ என்ற திரைப்படத்தில் நாயகியாக ரகுல் ப்ரீத்திசிங் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் அஜய் தேவ்கன் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளிலேயே சென்றுள்ளதாகவும், 12 கிலோமீட்டர் சைக்கிளில் சென்றது தனக்கு நல்ல அனுபவமாக இருந்தது என்றும் ரகுல் ப்ரீத்திசிங் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி தான் சைக்கிளில் சென்ற வீடியோவையும் அவர் அதில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத்திசிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சையின் காரணமாக குணமாகி உள்ளார் என்பதும் கொரோனாவில் இருந்து குணமாகிய பின்னர் தற்போது தான் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

அதை மட்டும் கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க: 'மாஸ்டர்' படக்குழுவுக்கு பிக்பாஸ் கவின் வேண்டுகோள்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தை விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரமுகர்களும்

எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ணிகிட்டு இருக்கேன்: விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துவரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்

விஜய் படம் பார்க்க மணிக்கணக்கில் டிக்கெட் கவுண்டரில் காத்திருந்தேன்: 'மாஸ்டர்' நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ்

சீறிப்பாய்ந்த சிறுத்தையிடம் தனியாளாகப் போராடி உயிர்பிழைத்த பெண்… அதிர்ச்சி சம்பவம்!!!

மேற்கு வங்க மாநிலத்தில் டீ எஸ்டேட்டில் வேலைப் பார்த்து கொண்டிருந்த பெண் ஒருவரை சிறுத்தை ஒன்று சீறிப்பாய்ந்து தாக்கி இருக்கிறது.

நேற்று சிரிப்பு, இன்று அழுகை: ஹவுஸ்மேட்ஸ்களை அழவைத்த பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ்கள் கடந்த 100 நாட்களில் கடந்து வந்த மகிழ்ச்சியான தருணங்களில் சில சில காட்சிகளை பிளாஸ்மா டிவியில் போட்டு காண்பிக்கப்பட்டது