அந்தரத்தில் ஒரு கால் ஒரு கை.. திருமணத்திற்கு பின் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் நடிகை..!

  • IndiaGlitz, [Friday,July 26 2024]

பிரபல நடிகை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பின்னும் அவர் வேற லெவலில் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ’யுவன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதன்பின்னர் ’தடையறத் தாக்க’ ’என்னமோ ஏதோ’ என சில தமிழ் படங்களில் நடித்தாலும் தெலுங்கில் தான் அவர் பிரபலமானார் என்பதும் மீண்டும் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் என்ட்ரியாகி அதன் பின்னர் ’தேவ்’ ’என்ஜிகே’ ’அயலான்’ போன்ற படங்களில் நடித்த நிலையில் சமீபத்தில் வெளியான ’இந்தியன் 2’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் கடந்த பிப்ரவரி மாதம் பக்னானி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு 23 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது அவர் தனது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் சற்று முன் அவர் ஜிம்மில் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

ஒரு கால் மற்றும் ஒரு கை அந்தரத்தில் இருக்க, அந்தரத்தில் இருக்கும் கால் மீது வெயிட் வைத்து அவர் சில நொடிகள் வொர்க்-அவுட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.

 

More News

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் வீட்டில் சூனியம் வைத்த பெண்? அதிர்ச்சி காரணம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் வீட்டிற்கு பெண் ஒருவர் சூனியம் வைத்ததாக கூறப்படும் நிலையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் தெலுங்கு போட்டியாளராகும் தமிழ் ஹீரோ.. டிஆர்பி எகிறுமா?

பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் போட்டியாளராக களம் இறக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த பேரன்.. வகுப்பறை வரை சென்ற ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேரன் பள்ளிக்கு செல்ல அடம் பிடித்த நிலையில் ரஜினிகாந்த் அவரை பள்ளிக்கு அழைத்துச் சென்று வகுப்பறை வரை அழைத்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'இந்தியன் 2' படத்தில் இதை செய்திருக்கலாம்.. படத்தை தூக்கிய பின் ஐடியா கொடுத்த நடிகை அம்பிகா..!

இன்று தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் கடந்த 12ஆம் தேதி ரிலீசான கமல்ஹாசனின் 'இந்தியன் 2'திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும்

இருமுறை கலைந்த கரு.. 42 வயதில் இரட்டை குழந்தை பெற்ற சீரியல் நடிகை.. நெகிழ்ச்சியான பதிவு..!

பிரபல சீரியல் நடிகை 10 வருடமாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் அவருக்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை அடுத்து சின்னத்திரை உலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.