சூர்யா, கார்த்திக் பட நடிகையின் வேற லெவல் யோகா… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,February 26 2021]

தமிழில் நடிகர் கார்த்திக்குடன் “தீரன் அதிகாரம் ஒன்று”, “தேவ்“ படங்களில் நடித்தவர் இளம் நடிகை ரகுல் ப்ரீத்திசிங். அதேபோல நடிகர் சூர்யாவுடன் “என்ஜிகே“ படத்தில் நடித்தன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இவர் பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரகுல் பாலிவுட்டில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் “மேடே“ படத்தின் படப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு இவர் ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர தமிழில் கமல்ஹாசன் நடித்து வரும் “இந்தியன் 2“, நடிகர் சிவக்கார்த்திகேயனுடன் “அயலான்“ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி இடத்தைத் தவிர இந்தியில் மேடே படம் இவருக்கு மிகப்பெரிய எண்ட்ரியைக் கொடுக்கும் எனவும் கருதப்படுகிறது.

யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்ட நடிகை ரகுல் தான் யோகா செய்யும் புகைப்படங்களையும் ஜிம்மில் வொர்க்அவுட் செய்யும் புகைப்படங்களையும் அவ்வபோது பதிவிட்டு ரசிர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார். இவர் தற்போது காலை முதுக்குப் பின்னால் மடக்கி செய்யும் யோகா செய்யும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். பின்னணி இசையாக பார்ட்டி இந்தி பட பாடல் ஒலிக்க பதிவிடப்பட்டு இருக்கும் இந்த யோகா வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.