ரகசியத் திருமணம் செய்து கொண்டேனா? கொந்தளித்த முன்னணி நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு, இந்தி எனப்பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலரை ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக வதந்தி பரவியதை அடுத்து கோபம் அடைந்து பதிலளித்துள்ளார்.
தமிழில் “என்ஜிகே“, “தீரன் அதிகாரம் ஒன்று“ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் ஏற்கனவே தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்துவந்த நிலையில் தற்போது இந்தி சினிமாக்களில் எட்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியைக் காதலிப்பதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து தற்போது சினிமாக்களில் பிசியாக நடித்துவரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக வதந்தி பரவியது. இதனால் கோபமடைந்த அவர், “நான் வெளிப்படையானவள். என்னுடைய காதலை பகிரங்கமாக அறிவித்தது போல் திருமணத்தையும் அறிவிப்பேன். அந்த துணிச்சல் என்னிடம் இருக்கிறது. மேலும் 10க்கும் மேற்பட்ட படங்களில் நான் தற்போது நடித்து வருகிறேன். இதுபோன்ற முட்டாள்தனமான வதந்திகளை நான் பெரிதுப்படுத்துவதில்லை“ என்று தெரிவித்து உள்ளார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் இந்தப் பதிலைத் தொடர்ந்து ரசிகர்கள் சிலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ரகுல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள “அயலான்“ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு திரைப்படமான “அக்டோபர் 31 டேடீஸ் நைட்“ எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்திருகிறார்.
அதேபோல “ரன்வே 34“, “தேங்க் காட்“, “டாக்டர் ஜி“, “மிஷன் சிண்ட்ரெல்லா என எட்டுக்கும் மேற்பட்ட இந்தி படங்களில் அவர் நடித்து வருகிறார். தற்போது திருமணம் பற்றிய வதந்தி கிளம்பிய நிலையில் “என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.. என்னுடைய முழுக்கவனமும் இப்போது என் தொழில் மீதுதான் இருக்கிறது“ எனப் பதில் அளித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments