நடுக்கடலில் யோகா? மெய்சிலிர்க்க வைக்கும் இளம் நடிகையின் டிரெக்கிங் அனுபவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இளம் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். இவர் தற்போது ஒரு சில இந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு யோகா, உடற்பயிற்சி போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்ட நடிகை ரகுல் அதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கோவா பயணத்தின்போது டிரெக்கிங் சென்ற அனுபவத்தைக் குறித்து மெய்சிலிர்க்க பகிர்ந்து கொண்டுள்ளார். கோவாவில் சில பகுதிகளில் மலையேற்றங்களில் ஈடுபட்டது, கடலின் நடுவில் நிலவொளியில் யோகா செய்வது, தியானம் மற்றும் நிறைய சத்தான உணவை சாப்பிடுவது என எல்லாவற்றையும் இந்த கோவா சுற்றுப் பயணம் நிறைவேற்றித் தந்து இருக்கிறது. இதற்கு முன் இப்படியொரு அனுபவத்தை நான் உணர்ந்ததே இல்லை என நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தனது கோவா பயணத்தைக் குறித்து உற்சாகமாகத் தெரிவித்து உள்ளார்.
நடிகர் சூர்யாவுடன் “என்ஜிகே“, நடிகர் கார்த்தியுடன் “தேவ்“ மற்றும் “தீரன் அதிகாரம் ஒன்று“ ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது “இந்தியன் 2“ படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இவரது “அயலான்“ திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. அதோடு இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “மே டே” திரைப்படத்தில் அஜய்தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com