மெக்காவில் கதறி அழுத நடிகை.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மெக்காவுக்கு சமீபத்தில் புனித யாத்திரை சென்ற நிலையில் அங்கு அவர் மெக்கா மசூதி முன் நின்று கதறி அழும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெக்காவுக்கு புனித யாத்திரை சென்ற ராக்கி சாவந்த் அங்கு புனித வழிபாடு நடத்திய பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்தார். இந்த நிலையில் திடீரென அவர் 'பாலிவுட்டில் நான் பெரிய நடிகையாக நினைத்தேன் ஆனால் ஆதில் ஏன் இப்படி பண்ணினாய்’ என்று தனது கணவர் பெயரை கூறி கதறி அழும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ராக்கி சாவந்த் மற்றும் ஆதில் ஆகிய இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். இதனை அடுத்து ஆதில் தன்னை அடித்து துன்புறுத்தியதாக ராக்கி சாவந்த் காவல் நிலையத்தில் புகார் அளிக்க ஆதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சமீபத்தில் தான் ஆதில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து ராக்கி சாவந்த் தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதாக பேட்டி அளித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் தன்னுடைய பாலிவுட் திரை உலகை வாழ்க்கையை ஆதில் தான் கெடுத்து விட்டார் என மெக்காவில் ராக்கி சாவந்த் கதறி அழும் வீடியோவை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்து கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments