close
Choose your channels

அழுத படியே நடிகை ரைசா வில்சன்… இன்ஸ்டா புகைப்படத்தைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

Friday, May 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமா நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான நடிகை ரைசா வில்சன் அழுத படியே இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்– 1 சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் ரைசா வில்சன். மாடலாக விளம்பர படங்களில் நடித்துவந்த இவர் ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பின்பு ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்ற அவர் தொடர்ந்து ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

ஆனால் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் இவர் தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் 2023 சம்மன் கேப்ஷன் என்று தனது பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார். அவருடைய புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை ரைசா வில்சன் பொழுது விடிவது போன்ற ஒரு புகைப்படத்தோடு அழுதபடியே இருக்கும் சில புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். கேப்ஷனில் யாரும் தனியாக இல்லை. நாம் அனைவரும் படிப்படியாக அதைக் கண்டுபிடித்து வருகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் இதை எப்படி எடுத்துக்கொள்வது? நடிகை ரைசா வில்சன் பாசிடிவ்வாக இருப்பதற்கு முயற்சிக்கிறாரா? அல்லது நெகட்டிவ் மனநிலையில் இருக்கிறாரா? என்றே தெரியவில்லை என்று கருத்துப் பதிவிட்டுள்ளனர்.

இன்னும் சில ரசிகர்கள் எல்லோரும் இதுபோன்ற மனநிலை வருவது சகஜம் தான். எல்லாம் கடந்துபோகும். தைரியமாக இருங்கள் என்று அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment