சாக்கு மூட்டையில் பிணமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை… கணவரே கொலை செய்தாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பங்களாதேஷ் நாட்டில் பிரபல சினிமா நடிகையாகவும் தொலைக்காட்சி தொடர் பிரபலமாகவும் இருந்துவந்த நடிகை ரைமா இஸ்லாம் ஷிமி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாக்கு மூட்டையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதாக அவரது கணவரே தற்போது ஒப்புக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பங்களாதேஷ் நாட்டு சினிமாவில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான “பர்தாமன்“ எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ரைமா இஸ்லாம் ஷிமி. இவர் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கூடவே பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவந்த இவர் பங்களாதேஷ் திரைப்பட கலைஞர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார். மேலும் ஒரு சில திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் 45 வயதான ஷிமி கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கெரனிகஞ்ச் அடுத்த ஹஸ்ரத்பூர் எனும் பகுதியில் தலை வெட்டப்பட்டு பிணமாக சாக்கு மூட்டையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார். முன்னதாக ஷிமியின் கணவர் ஷகாவத் அலி நோபல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலபாகன் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என்று புகார் அளித்திருந்தார். இதையடுத்து அடுத்த நாளே ஷிமி சாக்கு மூட்டையில் இருந்து மீட்கப்பட்டார்.
இதனால் ஷிமியின் கொலை வழக்கு குறித்து விசாரித்த போலீசார் அவரது கணவர் நோபலையும் கார் டிரைவரையும் விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் ஷிமியின் கொலை வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதை நோபல் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அவர் 3 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்தச் சம்பவம் பங்களாதேஷ் திரைப்பட வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments