அஜித்துக்கே சவால் விடும் பைக் ரைட்: பிரபல நடிகையின் வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Sunday,June 06 2021]

தமிழ் திரையுலகின் நடிகை ஒருவர் அஜித்க்கே சவால் விடும் வகையில் அசத்தலாக பைக் ஓட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘கசடதபற’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன்பின் ஜெயம் ரவி நடித்த ’தாம் தூம்’, ராகவா லாரன்ஸ் நடித்த ’காஞ்சனா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இவர் நடித்து உள்ளார் என்பதும், கடந்த 2017 ஆம் ஆண்டு பாலிவுட்டில் இவர் நடித்த ’ஜூலி 2’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராய் லட்சுமி, சமீபத்தில் பைக் ரைட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கருப்பு உடையில் ஸ்டைலாக பைக் ரைட் செய்யும் ஸ்லோ மோஷன் காட்சியின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் அஜித்க்கே சவால் விடும் வகையில் உள்ளது என்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நடிகை ராய்லட்சுமி தற்போது ’மிருகா’, ‘சின்ட்ரெல்லா;, ‘ஆனந்த பைரவி’ ‘ஜான்சி ஐபிஎஸ்’ ‘கேங்ஸ்டர்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

More News

கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தின் நாயகன் - நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு!

'வணக்கம் சென்னை' மற்றும் 'காளி' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி அடுத்த படத்தை இயக்குவதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று செய்திகள் வெளியானது.

'என்ன ஒரு அழகான உலகம்': மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்!

நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்க்ள் குவிந்து வருகிறது. 

சென்னை தேவி தியேட்டர் மூடப்படுகிறதா? சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைனில் திருட்டுத்தனமாக புதிய படங்கள் ரிலீஸ் ஆவதால் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் வருவதில்லை என்றும் இதனால் திரையரங்குகளில் பல நஷ்டத்தில்

ரூ.3.5 கோடி கொள்ளை: அஜித், விக்ரம் பட நடிகரிடம் விசாரணை!

கேரளாவில் ரூபாய் 3.5 கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் அஜித், விக்ரம் பட நடிகரிடம் விசாரணை நடத்த இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ராஜ கோபாலனா...? காம கோபாலனா....? 250 கேள்விகள்... திடுக்கிடும் தகவல்கள்...!

ஆசிரியர் ராஜகோபாலன் செய்த மற்றொரு கேவலமான செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது