பிரபல நடிகையின் கணவர் தூக்கில் தொங்கி மரணம்: கொலையா? தற்கொலையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாக இருந்து வரும் நடிகை ராகவியின் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் கொலையா? தற்கொலையா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நடிகை ராகவியின் கணவர் சசிக்குமார் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் கேமிராமேனாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடன்சுமை காரணமாக கடந்த சில நாட்களாக அவர் பெரும் மனவருத்தத்தில் இருந்ததாகவும், அவருடன் பணிபுரிந்த சக ஒளிப்பதிவாளர் ஒருவர் அவருடைய கடன் சுமையை பற்றி சமூக வலைத்தளங்களில் பரப்பியதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்து இருந்த சசிகுமார், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
சசிகுமாரின் மரணம் குறித்து ராகவிக்கு போலீசார் தகவல் அளித்த நிலையில் ராகவி உடனே சம்பவ இடத்திற்கு சென்று மரணம் அடைந்தது தனது கணவர் தான் என அடையாளம் காட்டினார்.
இந்த நிலையில் சசிகுமாருக்கும் மகேஷ் என்பவருக்கும் தொழில் ரீதியாக பிரச்னை இருந்ததாகவும், இதன் காரணமாக மகேஷ், சில தினங்களுக்கு முன்பு சசிகுமாரை வாட்ஸப்பில் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகவும், நடிகை ராகவி, போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments