பழம்பெரும் நடிகரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பழம்பெரும் நடிகர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை அவரது மகளே தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பழம்பெரும் நடிகரும் நடிகவேள் என்ற பட்டத்தை பெற்றவருமான எம்ஆர் ராதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகளும் பிரபல நடிகையுமான ராதிகா தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எம்ஆர் ராதா கடந்த 50 மற்றும் 60களில் ஹீரோ, வில்லன், காமெடியன் என பல்வேறு வேடங்களில் நடித்து அசத்தியவர். மேலும் தந்தை பெரியாரால் நடிப்பில் ஈர்க்கப்பட்டு அவர் கொடுத்த ’நடிக வேள்’ என்ற பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய காலத்திற்கும் பொருந்தும் வகையில் பல சமூக கருத்துக்களை 50 ஆண்டுகளுக்கு முன்பே பல திரைப்படங்களில் கூறியவர் எம்ஆர் ராதா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எம்ஆர் ராதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை அவரது மகள் நடிகை ராதிகா தனது ராடன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார். எம்ஆர் ராதாவின் பேரன் Lke இந்த படத்தை இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அட்லி தயாரித்த ‘சங்கிலி புங்கிலி கதவ திற’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஆர்.ராதாவின் பேரனாக மட்டுமின்றி ஒரு ரசிகனாக அவருடைய புதிய இன்னொரு முகத்தை இந்த படத்தில் காட்டவிருப்பதாகவும் எம்.ஆர்.ராதா குறித்து யாரும் தெரியாத பல விஷயங்களை தொகுத்து வைத்திருப்பதாகவும், அவை படம் பார்ப்பவர்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும் என்றும் இயக்குனர் Lke கூறுகிறார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments