நேரில் தாக்கும் எதிரிக்கு பயப்பட வேண்டாம், புகழ்ந்து பேசும் நண்பனுக்கு பயப்படுங்கள்: ராதிகா

நேரில் தாக்கும் எதிரிக்கு பயப்பட வேண்டாம், புகழ்ந்து பேசும் நண்பனுக்கு பயப்படுங்கள்: ராதிகா.

பாரதிராஜாவின் ’கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தில் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நடிகை ராதிகா, சமீபத்தில் திரையுலகில் 42 ஆண்டுகள்’ என்ற மைல்கல்லை எட்டினார். ஒரு நடிகர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நிலைத்திருப்பது சாதாரணமான ஒன்றே. ஆனால் ஒரு நடிகை 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதிலும் முன்னணி வேடத்தில் நடிப்பது என்பது உண்மையில் ஒரு பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ராதிகா தனது சமூக வலைத்தளத்தில், ‘எதிரிகள் உங்களைத் தாக்குவதைப் பற்றி பயப்பட வேண்டாம், ஆனால் உங்களைப் புகழ்ந்து பேசும் நண்பர்களிடம் பயந்தே இருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அமெரிக்க எழுத்தாளர் மற்றும் தத்துவஞானியான டேல் கார்னகி, அவர்கள் இளைஞர்களுக்கு தெரிவித்த இந்த கருத்தை தற்போது ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராதிகா திடீரென இந்த பதிவை ஏன் பதிவு செய்தார் என்பது தெரியவில்லை என்றாலும் இதில் உள்ள கருத்து எக்காலத்துக்கும் பொருந்துவதாக இருப்பதாக நெட்டிசன்கள் புகழாராம் சூட்டி வருகின்றனர்.