வரலட்சுமி குடும்பத்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் ஒருவர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் பிரபல நடிகை வரலட்சுமியின் தாயார் நேற்று கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்ற தகவல் வெளியானது என்பதும் இது குறித்த வீடியோவை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் கோவிட் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்
பிரபல நடிகையும் நடிகர் மற்றும் அரசியல்வாதி சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார் இன்று கோவிட் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தையும் வெளியிட்டு ’நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டேன், அனைவரும் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இருங்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளார்
இது குறித்த புகைப்படத்தை ராதிகா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முதல் அடுத்த கட்ட கோவிட் தடுப்பூசி நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது என்பதும் பிரதமர் மோடி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த தடுப்பூசியை போட்டு கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே.
#vaccine taken. Please protect yourself and loved ones go get vaccinated. Follow all safety norms ???? pic.twitter.com/NdHMoGzaIk
— Radikaa Sarathkumar (@realradikaa) March 2, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments