பிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் செல்பி எடுத்த நடிகை ராதிகா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க...!

  • IndiaGlitz, [Friday,September 13 2024]

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் நடிகை ராதிகா விமானத்தில் பயணம் செய்யும்போது செல்பி எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் விமானத்தில் பயணம் செய்த போது அதே விமானத்தில் பயணம் செய்த நடிகை ராதிகா அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த செல்பி புகைப்படத்தின் கேப்ஷனாக அவர் கூறியபோது, ‘மில்லியன்கணக்கான மக்களின் இதயங்களில் குடியிருப்பவர் விராட் கோலி, அவரது விளையாட்டு ஆர்வத்தினால் நம்மை பெருமைப்பட வைத்தார், அவருடன் பயணம் செய்தது எனது மிகுந்த மகிழ்ச்சி, செல்பி எடுக்க அனுமதி அளித்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட் கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் வங்கதேசம் உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி சென்னை வந்தார் என்பதும் சென்னையில் அவருக்கு உற்சாகமான வரவேற்பை கிரிக்கெட் ரசிகர்கள் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி இதுவரை 591 போட்டிகளில் விளையாடி 26 ஆயிரத்து 942 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்னும் 58 ரன்கள் எடுத்தால் சச்சின் சாதனையை அவர் முடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.