யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுத்த பிரபல நடிகர்.. ராதிகா பாராட்டு.. உதயநிதியிடம் கோரிக்கை..!
- IndiaGlitz, [Tuesday,July 30 2024]
அவதூறாக கருத்துக்களை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது பிரபல நடிகர் ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நடிகை ராதிகா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவியையும் அவர் கோரியுள்ளார்.
பல யூடியூப் சேனல்களில் திரையுலகினர் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பி வருவது தொடர்கதை ஆகி உள்ள நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல திரையுலக பிரபலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த செய்தியை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, விஷ்ணு மஞ்சுவுக்கு தனது வாழ்த்துக்களை நடிகை ராதிகா தெரிவித்துள்ளார் .
எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் திரையுலகினர் மீது வன்மத்தையும் வெறுப்புணர்ச்சியும் வெளிப்படுத்தி வரும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்கு அமைச்சர் மீது உதயநிதி ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகள் இணைந்து அவதூறான கருத்துக்களை வெளியிடும் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நடிகை ராதிகாவின் இந்த பதிவுக்கு நடிகை மீனாவும் தனது ஆதரவை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.