பாஜகவை யோசித்து தான் விஜய் தாக்குவார் என நினைக்கிறேன்: நடிகை ராதிகா
Send us your feedback to audioarticles@vaarta.com
பாஜகவை நடிகர் விஜய் யோசித்து தான் தாக்குவார் என நினைக்கிறேன் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது நடிகை ராதிகா தெரிவித்தார்.
'தமிழக வெற்றி கழகம்' என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய விஜய், நேற்று முன்தினம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடித்தார். இந்த மாநாடு குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாஜகவில் உள்ள ராதிகா இது குறித்து செய்தியாளர்களிடம் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது: "மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சி தொடங்கலாம்; அவரவர் பாதையில் கொள்கைகளை முன்னெடுக்கலாம். விஜய் மிகப்பெரிய நடிகர்; அதையும் மீறி அவர் அரசியலுக்கு வந்திருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
சிறுவயதிலிருந்து எனக்கு விஜய்யை தெரியும்; அவரது தந்தை இயக்கிய படங்களில் நான் நடித்த போது, விஜய்யை பார்த்திருக்கிறேன். விஜய் அதிகம் பேச மாட்டார், ஆனால் திடீரென மாநாட்டில் வேறு ஒரு விஜய்யை பார்த்தது போலிருந்தது. பாஜகவை தாக்குவதற்கு விஜய் யோசித்துப் பேசுவார் என நினைக்கிறேன்.
திராவிட மாடலை எதிர்க்கிறேன் என்று விஜய் தனது கட்சி மேடையில் கூறியுள்ளார். நான் கேள்விப்பட்டவரை பெரியாரின் அடிப்படையே நாத்திகம். மூடநம்பிக்கையை எதிர்ப்பது தான். அதை இல்லை என்று விஜய் சொல்லிவிட்டார்.
மேலும், தமிழக வெற்றி கழகத்தின் கொடியின் வண்ணம் சமத்துவ மக்கள் கட்சியின் கொடியின் வண்ணத்திலேயே உள்ளது; விஜய் அதை பயன்படுத்தியிருப்பது நல்ல விஷயமே," என்று நடிகை ராதிகா தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com