இதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.. மோடி தலையிட வேண்டும்: நடிகை ராதிகா ஆவேசம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ரோஜாவுக்கு தனது முழு ஆதரவு என தெரிவித்துள்ள நடிகை ராதிகா இந்த விஷயத்தில் மோடி தலையிட வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆந்திராவில் ஓஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் மற்றும் நடிகை ரோஜா மீது தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பண்டார சத்திய நாராயண மூர்த்தி என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்த நடிகை ரோஜா ’என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார் என்றும், தெலுங்கு தேசம் கட்சியில் பத்தாண்டு நான் இருந்தபோது இதைப்பற்றி எல்லாம் ஏன் சொல்லவில்லை என்றும் அவரது பேச்சைக் கேட்டு அவருடைய மனைவி அவரது கன்னத்தில் அறைந்திருக்க வேண்டும் என்றும் பேசி இருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து நடிகை ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’ஒரு தோழியாக, சக நடிகையாக ரோஜாவுக்கு நான் ஆதரவாக இருப்பேன், ரோஜாவின் தைரியம் பற்றி தனக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் இதுகுறித்து கூறியதாவது:
கடந்த இரண்டு நாட்களாக ரோஜா மீது தரம் தாழ்ந்த அரசியல் கருத்து பகிரப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது. பெண்களுக்கு சமீபத்தில் தான் 33 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது, பெண்களுக்கு கல்வி மட்டும் இன்றி அரசியலிலும் ஒரு பங்காக உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் பெண்கள் ஒரு தூணாக இருக்கும் நிலையில் பெண்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளது அசிங்கமாக உள்ளது என்று தெரிவித்தார். பெண்களை பாரத மாதமாக இந்தியாவில் பார்க்கும் நிலையில் இது போன்ற அவதூறு விமர்சனங்களை கண்டு நாங்கள் பயந்து விடுவோமா? ஒரு அமைச்சரை ப்ளூ ஃபிலிமில் நடித்தவர் என்று அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
பெண்களை விபச்சாரி என்று சொன்னாலோ, ப்ளூ பிலிமில் நடித்திருக்கிறார் என்று சொல்லி அசிங்கப்படுத்தினாலோ, பெண்கள் பயந்து விடுவார்கள் என்று நினைத்தீர்களா? இதையெல்லாம் பேசுவதற்கு நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும் என்றும் ராதிகா கூறியுள்ளார்.
மேலும் இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும், ரோஜா குறித்து அருவருப்பாக பேசிய அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்களுக்கு எதிராக இது போன்ற பேச்சுக்கு பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க வேண்டும்’ என்றும் ராதிகா கேட்டுக் கொண்டுள்ளார்.
I condemn below the belt hitting , labelling women, objectifying and being unparliamentary, an ex minister #bandarasatyanarayana has no qualms with his language and attitude. I stand for minister /actor amd good friend @RojaSelvamaniRK #women #harassment #politics pic.twitter.com/nmGHyeLgi2
— Radikaa Sarathkumar (@realradikaa) October 6, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout