3 தலைமுறை வாரிசுகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய ராதிகா அம்மா.. க்யூட் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,October 26 2024]

நடிகை ராதிகாவின் அம்மா இன்று தனது பிறந்த நாளை தனது மூன்று தலைமுறை வாரிசுகளுடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 80 மற்றும் 90களில் பிரபலமான நாயகியாக இருந்தவர் ராதிகா என்பதும், கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் அவர் இணைந்து நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே. தற்போதும் குணச்சித்திர வேடங்களில், சீரியல்களில் நடித்து வரும் ராதிகா, பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்து, விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராதிகாவின் தாயார் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், குடும்பத்தினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், ராதிகா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படத்தில் ராதிகாவின் தாயார் மூன்று தலைமுறை வாரிசுகளுடன் இருக்கும் காட்சி உள்ளது.

கீதா அவர்கள் தனது மகள் ராதிகா, ராதிகாவின் மகள் ரேயான், ரேயான் குழந்தைகள் என மூன்று தலைமுறையினர் ஒன்றாக உள்ள கியூட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை த்ரிஷா உள்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த புகைப்படத்திற்கு லைக் செய்துள்ளனர் என்பதும், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

கையில் கோப்பை..  கிளாமர் காஸ்ட்யூம்.. அமலாபால் பிறந்த நாள் புகைப்படங்கள்..!

நடிகை அமலாபால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கவனிக்க வேண்டியது விளையாட்டை அல்ல.. விளையாடுபவர்களின் யுக்தியை: விஜய் சேதுபதி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 19 நாட்கள் முடிவடைந்து, இன்று 20வட்ஜி நாள் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. இன்றைய எபிசோடின்

கும்மியடி கும்மியடி.. வருங்கால கணவரை கட்டிப்பிடித்து ரொமான்ஸ்.. ரம்யா பாண்டியன் வீடியோ..!

நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், வருங்கால கணவருடன் அவர் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா? பெரிய ஆச்சரியமில்லை..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு விஜய் சேதுபதியின் எபிசோடுகள் கூடுதல் விறுவிறுப்பை தருகின்றன

மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.. விஜய் அறிக்கை..!

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த தளபதி விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டை நாளை நடத்த இருக்கின்ற நிலையில்