3 தலைமுறை வாரிசுகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய ராதிகா அம்மா.. க்யூட் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,October 26 2024]

நடிகை ராதிகாவின் அம்மா இன்று தனது பிறந்த நாளை தனது மூன்று தலைமுறை வாரிசுகளுடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 80 மற்றும் 90களில் பிரபலமான நாயகியாக இருந்தவர் ராதிகா என்பதும், கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் அவர் இணைந்து நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே. தற்போதும் குணச்சித்திர வேடங்களில், சீரியல்களில் நடித்து வரும் ராதிகா, பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்து, விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராதிகாவின் தாயார் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், குடும்பத்தினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், ராதிகா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படத்தில் ராதிகாவின் தாயார் மூன்று தலைமுறை வாரிசுகளுடன் இருக்கும் காட்சி உள்ளது.

கீதா அவர்கள் தனது மகள் ராதிகா, ராதிகாவின் மகள் ரேயான், ரேயான் குழந்தைகள் என மூன்று தலைமுறையினர் ஒன்றாக உள்ள கியூட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை த்ரிஷா உள்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த புகைப்படத்திற்கு லைக் செய்துள்ளனர் என்பதும், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.