பாரதிராஜாவுடன் காலை உணவை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த 6 ஆண்டுகளாக திரைப்படங்கள் எதையும் ஏற்கவில்லை என்றாலும் அவ்வப்போது ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் அவர் தற்போது ’மீண்டும் ஒரு மரியாதை’ என்ற படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தில் பாரதிராஜாவே முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாரதிராஜாவால் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு அதன்பின்னர் கமல், ரஜினி உள்பட பிரபல நடிகர்கள் படங்களின் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும், நடித்து வருபவர் ராதிகா. தற்போது அவர் தேனியில் ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது பாரதிராஜாவை ஒரு நெகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் சந்தித்துள்ளார்.
இதுகுறித்து ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் ‘தேனியில் நடந்த ஒரு படப்பிடிப்பின் இடையே பாரதிராஜா அவர்களை சந்தித்ததாகவும் அவருடன் தனது காலை உணவை பகிர்ந்து கொண்டதாகவும் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். இந்த சந்திப்பை அடுத்து பாரதிராஜா இயக்கவுள்ள ‘மீண்டும் ஒரு மரியாதை’ படத்தில் ராதிகா முக்கிய வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிராஜா இயக்கிய இரண்டாவது படமான ’கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தில் தான் நடிகை ராதிகா அறிமுகமானார் என்பதும், இந்த படம் கடந்த 1978ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Breakfast in Theni with my director @offBharathiraja dropped in from my sets , I talked and he listened❤️❤️❤️❤️ pic.twitter.com/eka6iSrMkH
— Radikaa Sarathkumar (@realradikaa) November 10, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com