சூர்யாவின் 'எஸ் 3' படத்தில் இணைந்த பிரபல நடிகை

  • IndiaGlitz, [Saturday,August 27 2016]

எந்தவித கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் ஒருசில நடிகைகளில் ஒருவர் ராதிகா. கலைத்துறையின் பரம்பரையில் இருந்து வந்ததால் அவருடைய ரத்தத்திலேயே நடிப்பு கலந்துள்ளது என கூறலாம்.
சமிபகாலமாக அவர் ஹீரோக்களின் அம்மா வேடத்தில் வெகு இயல்பாக நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார். விஜய்க்கு அம்மாவாக 'தெறி', விஜய்சேதுபதிக்கு அம்மாவாக 'நானும் ரவுடிதான், தர்மதுரை, தங்கமகன்' படத்தில் தனுஷூக்கு அம்மாவாக என பல படங்களில் தன்னுடைய திறமையை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் ராதிகா தற்போது ஸ்ருதிஹாசனுக்கும் அம்மாவாக நடிக்கவுள்ளார்.
சூர்யா நடிப்பில் ஹரி இயக்கி வரும் 'எஸ் 3' படத்தில் ஸ்ருதிஹாசன் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் ஸ்ருதிக்கு அம்மாவாக ராதிகா நடிக்கவுள்ளதாகவும், அவர் சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பு மிக விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடித்த 'பூஜை' படத்தில் விஷாலுக்கு அம்மாவாக ராதிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பாகுபலி 2' படத்தில் எத்தனை கிளைமாக்ஸ்?

பிரமாண்ட இயக்குனர் ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' என்ற மாபெரும் வெற்றிக்கு பின்னர் அவர் தற்போது 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்....

மாதவன் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்

'இறுதிச்சுற்று' வெற்றிக்கு பின்னர் மாதவனுக்கு பல வாய்ப்புகள் தேடி வருகிறது. அப்படி வந்த வாய்ப்புகளில் ஒன்றுதான் இயக்குனர் சற்குணம் இயக்கும் படம்...

நாகேஷ் திரையரங்கத்தில் நயன்தாராவின் நாயகன்

'நெடுஞ்சாலை' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற நடிகர் ஆரிக்கு திருப்புமுனையாக அமைந்த படம் 'மாயா...

சசிகுமாரின் 'கிடாரி' சென்சார் தகவல்கள்

வெற்றிவேல்' என்ற வெற்றி படத்திற்கு பின்னர் சசிகுமார் நடித்து முடித்துள்ள திரைப்படம் வரும் 'கிடாரி', செப்டம்பர் 2ஆம் தேதி...

நிர்வாண காட்சிகள் லீக் ஆனது ஒருவகையில் நல்லதே. ராதிகா ஆப்தே

கடந்த வாரம் திரையுலகில் பரபரப்பாக வலம் வந்த செய்திகளில் ஒன்று 'கபாலி' நாயகி ராதிகா ஆப்தே 'Parched' என்ற படத்தில் நிர்வாணமாக நடித்ததாக வெளிவந்த செய்திதான்....