நடிகை ராதிகா தீபாவளி கொண்டாடியது எந்த பிரபலத்தின் வீட்டில் தெரியுமா? வைரல் வீடியோ!

நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டது என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்கள் தாங்கள் தீபாவளி கொண்டாடியதை புகைப்படமாகவும் வீடியோவாகவும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அவை மிகப் பெரிய அளவில் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிரபல நடிகை ராதிகா திரையுலக பிரபலத்தின் வீட்டில் தீபாவளி கொண்டாடியதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ராதிகா, பழம்பெரும் நடிகர் சிவகுமார் வீட்டில் தான் இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகுமாரின் வீட்டில் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோருடன் தீபாவளி கொண்டாடிய ராதிகா, அதன்பிறகு சிவகுமார் குடும்பத்தினருடன் நடனமாடிய வீடியோக்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.