கபாலி பட நடிகையின் வேற லெவல் போட்டோ ஷுட்… வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,March 12 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கபாலி”. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. கபாலியைத் தவிர “ஆல் இன் ஆல் அழகு ராஜா”, சித்திரம் பேசுதடி, “வெற்றிச்செல்வன்” உள்ளிட்ட ஒரு சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் நடிகை ஆப்தே தமிழில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவராக இருந்து வருகிறார். காரணம் இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் முக்கியத்துவம் கொண்டவையாக இருப்பதோடு போல்ட்டான கேரக்டரில் நடித்து ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து விடுவார். மேலும் இந்தி தவிர, தெலுங்கு, மராத்தி, பெங்காலி மொழிப்படங்களிலும் இவரது நடிப்பு பட்டையை கிளப்பி இருக்கிறது. அந்த வகையில் “ஃபேட் மேன்“, “அந்தாதூன்“ படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

மேலும் அடல்ட் மூவியிலும் இவரது நடிப்பு தனித்திறமை கொண்டதாக அமைந்து இருக்கும். அந்த வகையில் ஃபர்ச்ட், ஃபோபியா, லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற படங்களில் இவர் நடித்து இருந்தார். இப்படி முக்கியத்துவம் கொண்ட எந்த கதாபாத்திரத்திலும் தன்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்தி தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் நடிகை ராதிகா ஆப்தே தற்போது ஒரு போட்டோ ஷுட் நடத்தி அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

அதில் காப்பி கலர் உடையணிந்து படுக்கையில் நீட்டி படுத்தவாறு நடிகை ராதிகா ஆப்தே போஸ் கொடுத்து உள்ளார். மேலும் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு போட்டோ ஷுட்டாக இது இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர்.

More News

சின்னவயசு கனவு? புளியமரத்தில் தொங்கி விளையாடும் முன்னணி நடிகர்!

“பருத்திவீரன்“ படத்தில் அறிமுகமான நடிகர் கார்த்தி தற்போது தமிழின் முன்னணி நடிகராக அறியப்படுகிறார்

ஒட்டகத்துடன் ரொமான்ஸ் செய்யும் நடிகை யாஷிகா ஆனந்த்… வைரல் வீடியோ!

தமிழில் “துருவங்கள் 16“, “இருட்டு அறையில் முரட்டு குத்து“, “நோட்டா“, “ஜாம்பி“ போன்ற படங்களில் நடித்து இருந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

திருநங்கை MLA? அரசியலில் திருநங்கைகளின் நிலைமை குறித்த பிரத்யேக பேட்டி!

தமிழகச் சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக செய்தித்தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தார்

புத்தர் சிலை மாதிரி… டொனால்ட் டிரம்ப்? செல்வம் கொழிக்குமா?

பன்முகக் கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கடவுள்களை வைத்து இருக்கிறோம்.

'த்ரிஷ்யம்' பட குட்டிப்பாப்பாவின் க்யூட் குடும்பம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான 'த்ரிஷ்யம் 2' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பதும் தெரிந்ததே.