25 ஆண்டுகளுக்கு பின்.. நடிகை ராதாவின் செம்ம ரொமான்ஸ் போட்டோஷூட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
25 ஆண்டுகளுக்கு பின்னர் கணவருடன் மொரிஷியஸ் செல்வதாக கூறியுள்ள நடிகை ராதா தனது கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான ராதா ’அலைகள் ஓய்வதில்லை’ என்ற திரைப்படத்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன் பிறகு கமல் ரஜினி உட்பட பல பிரபலங்களுடன் அவர் நடித்தார் என்பதும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் கனவு கன்னியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ராதா கடந்த 1991 ஆம் ஆண்டு மும்பை ஹோட்டல் அதிபர் ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கார்த்திகா மற்றும் துளசி ஆகிய இரண்டு மகள்களும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். கார்த்திகா, துளசி ஆகிய இருவரும் நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ராதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் மொரிஷியஸ் செல்வதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ராதா மற்றும் அவர் கணவர் மொரிஷியஸ் தீவில் ரொமான்ஸ் உடன் இருப்பதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது
குறிப்பாக அவரது சக நடிகைகள் குஷ்பு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout