close
Choose your channels

திருமணமான சில ஆண்டுகளில் எடுத்த புகைப்படம்.. கணவர் குழந்தையுடன் க்யூட் ராதா..!

Tuesday, April 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராதா திருமணமாகி ஒரு சில ஆண்டுகளில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அதில் கணவர் குழந்தையுடன் அவர் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதா என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ் ,கார்த்திக் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ராதா கடந்த 1991ஆம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கார்த்திகா மற்றும் துளசி ஆகிய இரண்டு மகள்கள் மற்றும் விக்னேஷ் நாயர் என்ற மகன் இருக்கிறார் என்பதும், ராதாவின் இரண்டு மகள்களுமே திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ராதா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் ஆன ஒரு சில ஆண்டுகளில் தனது கணவர் மற்றும் மகள் கார்த்திகாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக், கமெண்ட் குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment