அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த கமல், ரஜினி பட நாயகி!

  • IndiaGlitz, [Monday,March 08 2021]

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது கமல் ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்

பாரதிராஜா இயக்கிய ’அலைகள் ஓய்வதில்லை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ராதா. இவர் நேற்று திருவனந்தபுரத்தில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு அமைச்சா் அமித்ஷா, பாஜகவின் உறுப்பினர் அட்டையை கொடுத்து வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே பாஜகவில் காயத்ரி ரகுராம், குஷ்பூ, நமீதா, குட்டிபத்மினி, கவுதமி உள்பட பல நடிகைகள் இணைந்து உள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் நடிகை ராதாவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று பாஜகவில் இணைந்து உள்ள நடிகை ராதாவுக்கு கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

மேலும் நேற்று அமித்ஷா முன்னிலையில் ‘பாட்ஷா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் தேவன் அவர்களும் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது