ராஷிகண்ணாவின் வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ!

பிரபல தெலுங்கு நடிகையான ராஷிகண்ணா தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை அடுத்து அவர் ஜெயம் ரவியின் ‘அடங்கமறு’, விஷாலின் ’அயோக்யா’, விஜய்சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் சுந்தர் சியின் ‘அரண்மனை 3 , விஜய்சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’, கார்த்தியின் ‘சர்தார்’மற்றும் மேதாவி போன்ற தமிழ் திரைப்படங்களிலும் ஒரு மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷிகண்ணாவுக்கு 7 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்களுக்கு மில்லியன் கணக்கில் லைக்ஸ்கள் குவியும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ராஷிகண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வேற லெவல் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு சுமார் 6 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.