என் வருங்கால கணவர் இந்த விஷயத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்: ராஷிகண்ணா

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா தனது வருங்கால கணவருக்கு ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’இமைக்காநொடிகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணா அதன்பிறகு அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள ’ அரண்மனை 3’ திரைப்படம் வரும் ஆயுதபூஜை தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’சர்தார்’, ‘திருச்சிற்றம்பலம்’ ‘சைத்தான் கே பச்சான்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஷி கண்ணா தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்ளுக்கு பதிலளித்தார். அப்போது உங்களுக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்கவேண்டும் என்று கேட்டதற்கு ’எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ, அவர் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும் என்றும் ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை விஜய்யை பிடிக்கும் என்றும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு ஆகியோர்களை பிடிக்கும் என்று கூறியுள்ளார். நாயகிகளை பொறுத்த வரை நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா ஆகியவர்கள் தனக்கு மிகவும் பிடித்த நடிகைகள் என்றும் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.