கடை திறப்பு விழாவுக்கு சென்ற நடிகை பிரியங்கா மோகன் காயம்: என்ன நடந்தது?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை பிரியங்கா மோகன் கடைத் திறப்பு விழாவுக்கு சென்ற நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டதாக வெளிவந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரை உலகில் சிவகார்த்திகேயன் நடித்த "டாக்டர்" என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன், அதன் பின்னர் "எதற்கும் துணிந்தவன்" மற்றும் "கேப்டன் மில்லர்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, அவர் "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவ்வப்போது கடைத் திறப்பு விழாவுக்கு செல்லும் நடிகை பிரியங்கா மோகன், தெலுங்கானாவில் உள்ள கடைத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், திடீரென மேடை சரிந்து விழுந்ததால் கூட்ட நெரிச லுக்கிடையே அவர் கீழே விழுந்தார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்தில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "இன்றைக்கு நடந்த சிறு விபத்தில், சிறிய காயங்களுடன் உயிர் தப்பினேன். தற்போது நான் நலமாக இருக்கிறேன் என்பதை எனது ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். அவர்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும் அக்கரைக்கு மிகவும் நன்றி," என்று அவர் தெரிவித்துள்ளார்.
🌟 ప్రియాంక మోహన్ ప్రమాదం నుంచి క్షేమంగా బయటపడ్డారు! #Thorrur #KasamShoppingMall #PriyankaMohan #SafetyFirst https://t.co/p6yXD0V85E pic.twitter.com/gFL91M0Ceb
— SumanTV (@SumanTVTelugu) October 3, 2024
In light of the accident that occurred at an event I had attended in Torrur today, I wanted to let my well wishers know that I'm okay and was lucky to escape with minor injuries.
— Priyanka Mohan (@priyankaamohan) October 3, 2024
My prayers and wishes for a speedy recovery to those who may have suffered any injuries in the…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com