இது ஸ்நாக் டைம்… பிரபல நடிகையின் கணவர் செய்த வேறலெவல் குறும்புத்தனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக அழகியான நடிகை பிரியங்கா சோப்ரா தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான “தமிழன்” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்து தற்போது ஹாலிவுட்டில் ரவுண்டுகட்டி நடித்து வருகிறார்.
இவர் பாலிவுட் சினிமாவில் “ஆண்டாஸ்“, “முஜ்ஸே ஷாதி கரோகி“, “கிரிஷ்“, “டான்“, “காமினி“, “7கூன் மாஃப்“, “பார்பி“, “மேரி கோம்“, “தில் தடக்னே டோ“, “பாஜிராவ் மஸ்தானி“ எனப் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹாலிவுட் சினிமாக்களில் “தி ஸ் இஸ் பிங்க்” என்பது போன்ற ஒரு சில படங்களில் தலைக்காட்டிய இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவான “குவாண்டிகோ“ த்ரில்லர் கதையில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார்.
இந்நிலையில் பிரபல பாப் பாடகர் நிக் ஜோனாசை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை பிரியங்கா தொடர்ந்து அமெரிக்காவிலேயே செட்டிலும் ஆகிவிட்டார். அதோடு நியூயார்க்கில் “சோனா” எனும் பெயரில் ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
தற்போது தனது கணவருடன் கடற்கரையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ள நடிகை பிரியங்கா அதில் நிக் ஜோனாஸ் செய்யும் குறும்புத்தனத்தையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் நிக் ஜோனாஸ் ஸ்நாக் சாப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் கரண்டிகளை வைத்து நடிகை பிரியங்காவை சாப்பிட முற்படுகிறார். இந்த புகைப்படம் சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com