நியூயார்க்கில் ரெஸ்ட்டாரெட் திறக்கும் விஜய் பட நாயகி!

  • IndiaGlitz, [Monday,March 08 2021]

விஜய் நடித்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ஒருவர் நியூயார்க்கில் ரெஸ்ட்டாரெட் திறக்க இருப்பதாக அறிவித்துள்ளார்

உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் நடித்த ‘தமிழன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின்னர் அவர் பாலிவுட் ஹாலிவுட் என தனது திரைப் பயணத்தை விரிவாக்கினார் என்பதும் தற்போது அவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ப்ரியங்கா சோப்ரா, தனது திரையுலக பயணம் குறித்து புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார் என்பதும் அந்த புத்தகத்தில் விஜய் உள்பட தன்னுடன் பணியாற்றியவர்களை பற்றி எழுதி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நியூயார்க்கில் புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை துவங்க ஏற்பாடு செய்து வருவதாக பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். இதற்காக பூஜை போட்ட படங்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட அவர் தற்போது இந்த ரெஸ்ட்டாரெட் தயாராகி விட்டதாகவும் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் படத்தில் அறிமுகமான நடிகை ப்ரியங்கா சோப்ரா, நியூயார்க்கில் ரெஸ்ட்டாரெட் திறக்க உள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.