ஒரு உடைக்கு இத்தனை லட்சமா? பாலிவுட் நடிகையின் தெறிக்கவிடும் பேஷன் பிக்!

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

தமிழில் தளபதி விஜய் நடித்த “தமிழன்” படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. உலக அழகிப் பட்டம் வென்ற இவர் இந்தி சினிமா, அடுத்து ஹாலிவுட் என்று ரவுண்டு கட்டி கலக்கி வருகிறார். மேலும் ஹாலிவுட் பாப் பாடகர் நிக் ஜோனாசை காதலித்துத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இவர் தற்போது உலகப் பிரபலங்களில் ஒருவராகவும் மாறிவிட்டார்.

நடிப்பு மட்டுமல்லாது நடிகை பிரியங்கா பேஷன் விஷயங்களிலும் படு ஆர்வம் கொண்டவர். மேலும் பாலிவுட் சினிமாவில் பேஷனுக்காக பெயர் இவர் ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சிகளில் உலக ரசிகர்களையே கதிகலங்க வைத்து விடுவார். அத்தகைய சிறப்பு கொண்ட நடிகை பிரியங்கா சமீபத்தில் 74 ஆவது BAFTA AWARDS நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்காக 2 உடைகளை அணிந்து இருந்த நடிகை பிரியங்காவின் பேஷன் டேஸ்ட் அனைத்து ரசிகர்களாலும் வரவேற்கப்பட்டது.

மேலும் இந்த உடைகளை உடுத்திக் கொண்டு கணவர் நிக்குடனும் போட்டோ ஷுட் நடத்தி இருந்தார். இந்த உடைகளின் விலைதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. காரணம் இளஞ்சிவப்பு நிறம் கொண்டு இருந்த ஒரு ஜாக்கெட்டை நடிகை பிரியங்கா அணிந்து இருந்தார். அதன் விலை 3,915 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 75 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உடையைத் தவிர டச்சு ஆடை வடிவமைப்பாளர் ரொனஸ் வான் டெர் என்பவர் உருவாக்கிய கருப்பு நிறத்தினால் ஆன பட்டு ஜாக்கெட்டையும் நடிகை பிரியங்கா உடுத்தி இருந்தார்.

இந்த இரு உடைகளும் தற்போது சமூக வலைத்தளத்தில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது. அதோடு அதன் விலை குறித்தும் தற்போது பேசப்பட்டு வருகிறது. மேலும் முன்பக்கம் திறந்தபடி இருந்த இந்த ஜாக்கெட் உடைகளுடன் நடிகை பிரியங்கோ போட்டோ ஷுட்டையும் நடத்தி இருக்கிறார். இந்த போட்டோ ஷுட்டில் கணவர் நிக் ஜோனாசும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.