மார்டன் டிரெண்டில் நடிகை பிரியாமணி… ரசிகர்களை ஈர்த்த புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தான் நடித்த முதல் படத்திலேயே தேசிய விருதுபெற்று ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகை பிரியாமணி. இவர் “பருத்திவீரன்“ திரைப்படத்தில் முத்தழகு எனும் கதாபாத்திரன் மூலம் தமிழ் ரசிகர்களை தன்பக்கம் கட்டிப்போட்டிருந்தார். அதன் பிறகு ஒருசில தமிழ் படங்களில் நடித்த இவர் தற்போது தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை பிரியாமணி சோஷியல் மீடியா பக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாகவே இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புது போட்டோ ஷுட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது.
மினி ஸ்கர்ட் மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்திருக்கும் நடிகை பிரியாமணி இந்தப் புகைப்படத்தில் பார்ப்பதற்கே இளம் நடிகையைப் போன்று தோற்றமளிக்கிறார். “மலைக்கோட்டை“, “தோட்டா“, “ராவணன்“, “சாருலதா“ போன்ற திரைப்படங்களில் தேர்ந்த நடிப்பை கொடுத்திருந்த நடிகை பிரியாமணி சமீபத்தில் ஹிந்தியில் வெளியான “தி பேமிலி மேன்2“ வெப் சீரிஸின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com