பாஜகவில் இணையும் ரஜினி, கமல் பட நடிகை

பிரபல தெலுங்கு நடிகையும், தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'வள்ளி', கமல்ஹாசன் நடித்த 'பாசவலை' உள்பட பல படங்களில் நடித்தவருமான நடிகை பிரியா ராமன் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வந்துள்ளது

நடிகை பிரியாராமன், 'நேசம் புதிது' என்ற படத்தில் நடித்தபோது நடிகர் ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து பிரியாராமன் விவாகரத்து பெற்றார்.

விவாகரத்துக்கு பின் செம்பருத்தி உட்பட பல சீரியல்களில் பிசியாக இருக்கும் நடிகை பிரியா ராமன் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்காக அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள பாஜக பிரமுகர்களை சந்தித்துள்ளதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் பிரதமர் மோடி முன்னிலையில் அவர் பாஜகவில் அதிகாரபூர்வமாக இணையப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

நடிகர் ரஞ்சித் கடந்த சில மாதங்களுக்கு முன் பாமகவில் இருந்து விலகி அதன்பின் தினகரனின் அமமுகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே
 

More News

மீராமிதுன் இன்னொரு வழக்கு: பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது போலீஸ்

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமாகிய மீராமிதுன் மீது ஏற்கனவே ரஞ்சிதா என்ற பெண் ரூ 50 ஆயிரம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக

'நேர் கொண்ட பார்வை' - பிங்க் படங்களின் ரன்னிங் டைம் வித்தியாசம்

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது

அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸாகும் இரண்டு முன்னணி நடிகைகளின் படங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' திரைப்படம் ஜூலை 26ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த படம் தற்போது ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டு

பிரபல நடிகருக்காக சிம்பு பாடிய பாடல்!

சிம்பு கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். நார்தன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடித்து வருகின்றனர்

ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு! அழைப்பை மீண்டும் மறுப்பாரா கமல்?

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வரும் ஆகஸ்டு 7ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.