மணிப்பூர் விவகாரம்: ஆவேசமான கருத்தை கூறிய பிரியா பவானி சங்கர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிப்பூர் விகாரம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும் என்று ஆவேசமாக தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே குஷ்பூ, ஜிவி பிரகாஷ், சீனு ராமசாமி உள்ளிட்ட பல திரை உலக பிரபலங்கள் இது குறித்து தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து பதிவு செய்துள்ளார்.
மணிப்பூர் கொடூரத்தில் சமூகம், மனிதநேயம் தோல்வி அடைந்துள்ளதாகவும் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர நிகழ்வை சக மனிதராக கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
மேலும் இது போன்ற பல கொடூர செயல்களுக்கு இது உதாரணம் மட்டுமே என்றும் ஊடகங்களை முடக்குவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாது என்றும் பிரியா பவானி சங்கர் பதிவு செய்துள்ளார்.
Manipur women- The society, the community, humanity everything failed on various levels. We need to condemn this act with all our integrity as humans. This could only be a sample of many such brutality. Shutting down the media is not gonna help the people in trouble. #Manipur
— Priya BhavaniShankar (@priya_Bshankar) July 20, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com