நயன்தாரா, பிரபுவை அடுத்து திருப்பதி சென்ற பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் திருப்பதி கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர் என்பதும், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாக விஐபி தரிசனம், ரூபாய் 300 தரிசனம் மற்றும் இலவச தரிசனம் ஆகியவை அனுமதிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி சென்றார் என்பதும், அதேபோல் இளைய திலகம் பிரபு அவர்கள் தனது குடும்பத்தினருடன் திருப்பதி சென்றார் என்பதையும் பார்த்தோம். அதுமட்டுமின்றி தளபதி விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் வம்சி ஆகியோர்களும் தங்களுடைய குடும்பத்துடன் திருப்பதி சென்றனர்.
இந்த நிலையில் தற்போது நடிகை பிரியா ஆனந்த் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை பிரியா ஆனந்துக்கு கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாத மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். மேலும் கோவிலுக்கு வெளியே அவர் வந்தபோது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நடிகை ப்ரியா ஆனந்த், அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கியுள்ள ‘காசேதான் கடவுளடா’ மற்றும் பிரசாந்தின் ‘அந்தகன்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments