பணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,November 23 2020]

தமிழ் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் நடிகை ப்ரியா ஆனந்த் தற்போது ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். பிளாக் காமெடி வெப்சீரிஸ் ஆக உருவாகி வரும் இந்த தொடரில் முகம்மது அயூப் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த வெப்சீரிஸில் பிரியா ஆனந்த் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப்சீரிஸ் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ப்ரியா ஆனந்த் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் 2000 ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலையை அணிந்து உட்கார்ந்திருப்பது, பணமழையில் அவர் நனைந்து இருப்பது போன்று உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

’ப்ரியா ஆனந்த்’ நடிப்பில் கடந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜியின் ’எல்கேஜி’ மற்றும் துருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டு அவர் கன்னடத்தில் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மூன்றின் படப்பிடிப்புகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

More News

ஜெயிலில் இருந்து தப்பித்துவிட்டேன்: சுசியின் முதல் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சுசித்ரா வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் போஸ்ட்டாக விநாயகர்

சூர்யாவுடன் எப்படி ஷாலினி அஜித்? வைரலாகும் புகைப்படம்!

நடிகர் சூர்யா கடந்த 1997ஆம் ஆண்டு விஜய் நடித்த 'நேருக்கு நேர்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். கடந்த 23 ஆண்டுகளில் அவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்

பிக்பாஸ் பாலாஜி மீது பாயும் ரூ.1 கோடி மானநஷ்ட வழக்கு!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருபவர் பாலாஜி. பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்திலேயே அழகிப் போட்டி நிறுவனம்

தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் எப்படி இருக்கும்??? இந்திய வானிலையின் விரிவான அறிக்கை!!!

வங்காள விரிகுடா பகுதியில் உள்ள தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக அடுத்த 12 மணி நேரத்துக்குள் அது குறைந்த அழுத்தமாகவும்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: டிஆர் தோல்வி, வெற்றி பெற்ற விஜய் பட தயாரிப்பாளர்!

தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்றது என்பதும் மொத்தம் 1303 வாக்குகள் என்றாலும் 1050 பேர்கள் மட்டுமே வாக்களித்தனர் என்பது தெரிந்ததே.