48 வயதில் வெறித்தனமாக வொர்க் அவுட்? பிரபல நடிகையைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து தற்போது சினிமாவை விட்டே விலகி இருக்கும் நடிகை ஒருவர் தன்னுடைய 48 வயதிலும் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்துவருகிறார். அவருடைய வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘தில்சே’ திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமானவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இந்தத் திரைப்படம் ‘உயிரே’ தமிழில் எனும் பெயரில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து பல ஹிட் படங்களில் நடித்த இவர் 20 வருடங்களுக்கு மேலாக பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வந்தார்.
மேலும் ஐபிஎல் போட்டிகளுக்காக பஞ்சாப் அணி உரிமையாளர்களுள் ஒருவராகவும் இருந்து வந்தார். அந்த வகையில் கிரிக்கெட் ரசிகர்களும் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை அதிகளவில் அறிந்து வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த 2016 இல் இவர் அமெரிக்காவை சேர்ந்த ஜுன் குட் இனஃப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனால் குறைந்த அளவில் சினிமாவில் கவனம் செலுத்திவந்த அவர் இறுதியாக 2018 இல் வெளியான ‘பயாஜி’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து 2021 இல் வாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட நடிகை ப்ரீத்தி ஜிந்தா அவர்களுக்கு ஜெய் ஜிந்தா குட் இனஃப் மற்றும் ஜியா ஜிந்தா குட் இனஃப் என்று பெயர் வைத்ததோடு தற்போது 2 குழந்தைகள் மற்றும் கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மேலும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளுக்காக இந்தியா வந்திருந்தார்.
இந்நிலையில் 48 வயதாகும் இவர் தற்போதும் தனது உடலை படு பிட்டாக வைத்திருக்கிறார். அதற்குக் காரணம் அவருடைய வெறித்தனமான வொர்க் அவுட் என்றே சொல்லலாம். யோகா மற்றும் உடற்பயிற்சி மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகை ப்ரீத்தி ஜிந்தா தொடர்ந்து பிட்னஸ் விஷயங்களில் அக்கறை காட்டி வருகிறார்.
இந்நிலையில் தனது பிட்னஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கும் ப்ரீத்தி ஜிந்தா, ஜிம்மில் இருக்கும் நேரம்தான் எனது நாளின் சிறந்த பகுதி. அங்குதான் எனக்கு சிறிது நேரம் கிடைக்கிறது. என் உடலுடன் மீண்டும் இணைவதற்கான நேரம் மற்றும் அனைத்து உடற்பயிற்சிகளையும் முடித்தப்பின் நன்றாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் தற்போது ஜிம்மில் கடுமையான வலியோடு நடிகை ப்ரீத்தி ஜிந்தா வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி சமூகவலைத் தளங்களில் கவனம் பெற்றிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு 48 வயது என்றால் நம்ப முடியுமா? என்று ஆச்சர்யத்தோடு அவருடைய பிட்னஸ் செயல்பாடுகளைப் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments