வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தைகளுக்கு தாயான மணிரத்னம் நாயகி!

  • IndiaGlitz, [Sunday,November 21 2021]

மணிரத்னம் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாய் ஆகியுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மணிரத்தினம் இயக்கிய திரைப்படங்களில் ஒன்று ’உயிரே’ என்பதும் இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ப்ரீத்தி ஜிந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை பிரீத்தி ஜிந்தா அமெரிக்காவை சேர்ந்த ஜீன் குட்னப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 46 வயதான பிரீத்தி ஜிந்தா தற்போது வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளர். தனது குழந்தைகளுக்கு ஜெய் ஜிந்தா, ஜியா ஜிந்தா என பெயர் சூட்டி உள்ளதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நானும் எனது கணவரும் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் உள்ளோம் என்றும் எங்களது வாழ்க்கையில் இது ஒரு புதிய கட்டம் என்றும், மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் எங்களுடைய வாடகைத் தாய்க்கு நன்றி என்றும் பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்ற பிரீத்தி ஜிந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.