close
Choose your channels

நடிகையின் யோகா வீடியோவுக்கு நெட்டிசனின் சர்ச்சை கமெண்ட்..! குவியும் கண்டனங்கள்..!

Thursday, June 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்கள் யோகா செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சூர்யா, கார்த்தி உள்பட பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ப்ரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா தினத்தில் யோகா செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவுகளுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் ப்ரணிதாவின் யோகா வீடியோவுக்கு நெட்டிசன் ஒருவர் ’கொடுத்து வச்சவன் உன் புருஷன்’ என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசனின் இந்த கமெண்ட்டுக்கு ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.



நடிகை ப்ரணிதா கடந்த 2021ஆம் ஆண்டு தொழிலதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அர்ணா என்ற பெயரை தனது குழந்தைக்கு வைத்த ப்ரணிதா, குழந்தையின் புகைப்படத்தை அவ்வப்போது பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது,.

இந்த நிலையில் நடிகை ப்ரணிதா தற்போது ஒரு கன்னடம் மற்றும் ஒரு மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment