நடிகையின் யோகா வீடியோவுக்கு நெட்டிசனின் சர்ச்சை கமெண்ட்..! குவியும் கண்டனங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,June 22 2023]

நேற்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்கள் யோகா செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சூர்யா, கார்த்தி உள்பட பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ப்ரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா தினத்தில் யோகா செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவுகளுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் ப்ரணிதாவின் யோகா வீடியோவுக்கு நெட்டிசன் ஒருவர் ’கொடுத்து வச்சவன் உன் புருஷன்’ என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசனின் இந்த கமெண்ட்டுக்கு ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.



நடிகை ப்ரணிதா கடந்த 2021ஆம் ஆண்டு தொழிலதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அர்ணா என்ற பெயரை தனது குழந்தைக்கு வைத்த ப்ரணிதா, குழந்தையின் புகைப்படத்தை அவ்வப்போது பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது,.

இந்த நிலையில் நடிகை ப்ரணிதா தற்போது ஒரு கன்னடம் மற்றும் ஒரு மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,

More News

இன்று ஒரே நாளில் விஜய் - கவின் பிறந்த நாள்.. இருவருடனும் அடுத்தடுத்து நடித்த நடிகையின் வாழ்த்து..!

விஜய் மற்றும் கவின் ஆகிய இரண்டு நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்த நடிகை இன்று இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சஞ்சய் தத்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

தளபதி விஜய் இன்று தனது 49 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று அதிகாலை 12

ஆபரேஷன் செய்து உடம்பை குறைத்தாரா? நெட்டிசன் கேள்விக்கு பதிலடி கொடுத்த ஹன்சிகா..!

ஆபரேஷன் மூலம் உடம்பை குறைத்து விட்டு, யோகா செய்து உடம்பை குறைத்ததாக ஹன்சிகா பொய் சொல்கிறார் என நெட்டிசன் ஒருவர் பதிவு செய்த நிலையில் அந்த பதிவுக்கு நடிகை ஹன்சிகா பதிலடி கொடுத்துள்ளார்.

சூர்யாவின் 'கங்குவா' படத்தில் இணைந்த 'கேஜிஎப்' நடிகர்.. வேற லெவல் வில்லனா?

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சென்னையில்

யூடியூப் கமெண்ட்தான் என்னுடைய வீடியோ - மதன் கௌரி

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023  நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது  .