திருமணத்திற்குப் பிறகு நடிகை பிரணிதா வெளியிட்ட க்யூட் வீடியோ… வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் நடிகர் அருள்நிதி நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “உதயன்” எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். பின்பு நடிகர் கார்த்தியுடன் “சகுனி”, நடிகர் சூர்யாவுடன் மாஸ் என்ற “மாசிலாமணி“ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
தமிழ் சினிமாவைத்தவிர தெலுங்கு, கன்னடம் மொழிப் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை பிரணிதா தற்போது பாலிவுட்டிலும் கால்பதித்து இருக்கிறார். இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜு என்பவரை கடந்த மே 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் குறித்து யாருக்கும் தெரிவிக்காத அவர், கொரோனா இரண்டாம் அலை தொற்றின் காரணமாக நெருங்கின உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவித்து இருந்தார்.
மேலும் கொரோனா நேரத்தில் ஏழை மக்கள் பலருக்கும் இலவச கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய நடிகை பிரணிதா சாலையோர மக்களுக்கு இவலச உணவு மற்றும் மளிகை பொருட்களை தாராளாமாக வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வந்தார். அவர் தற்போது திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக க்யூட் பிங்க் நிற உடையணிந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments