கிளாமரான கர்ப்பகால புகைப்படங்கள்.. பிரபல நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Saturday,August 24 2024]

சூர்யா, கார்த்தி படங்களில் நாயகியாக நடித்த நடிகை இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆகி உள்ள நிலையில் கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில், அதில் அளவுக்கு மீறிய கிளாமர் இருப்பதாக கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

சூர்யா நடித்த ’மாஸ் என்ற மாசிலாமணி’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட சில படங்களில் நடித்தவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். இவர் தொழில் அதிபர் ஒருவரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 2022 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

நடிகை ப்ரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் சமீபத்தில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாவில் கர்ப்ப கால புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் அளவுக்கு மீறி கிளாமராக உள்ளதாக ரசிகர்கள் பதிவு செய்து கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களை பதிவு செய்து ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸ், நூற்றுக்கணக்கான கமெண்ட் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.