பாத்-டேப் குளியல், நீர்ச்சருக்கு விளையாட்டு. மாலத்தீவை அணுஅணுவாக ரசிக்கும் பிரணிதா: வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Thursday,September 15 2022]

சமீபத்தில் குழந்தை பெற்ற நடிகை பிரணிதா தனது கணவருடன் மாலத்தீவு சென்றுள்ள நிலையில் மாலத்தீவில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சூர்யா நடித்த ’மாஸ்’, கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கடந்த ஆண்டு மே மாதம் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் கடந்த ஜூன் மாதம் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது கணவருடன் மாலத்தீவு சென்ற பிரணிதா பிகினி உடை உள்பட பல்வேறு போஸ்களில் பதிவு செய்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள வீடியோவில் தனது கணவருடன் மாலத்தீவில் இருக்கும் பல காட்சிகளை வெளியிட்டுள்ளார். பாத் டேப்பில் சொகுசு குளியல், நீர் சறுக்கு விளையாட்டு, கணவருடன் கைகோர்த்து நடனம் உள்ளிட்ட பல காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.

மேலும் மேற்கண்ட வீடியோவில் இருக்கும் காட்சிகள் குழந்தை பிறப்பதற்கு முன்பாக எடுக்கப்பட்டதா? அல்லது குழந்தை பிறந்த பின் எடுக்கப்பட்டதா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி நிலையில் ’குழந்தை பிறந்த பின்னர் தான்’ என பிரணிதா பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

வீட்டில் பணியாற்றும் ஊழியரின் திருமணத்திற்கு விக்ரம் செய்த செலவு இத்தனை லட்சங்களா?

பொதுவாக திரையுலக நட்சத்திரங்கள் தங்கள் வீட்டில் பணிபுரியும் ஊழியர்களின் இல்லத் திருமணத்திற்கு வருவது இல்லை. அப்படியே வந்தாலும் பேருக்கு தலைகாட்டி விட்டு சென்று விடுவார்கள்.

'சத்யா' சீரியல் ஆயிஷாவுக்கு திருமணமாகிவிட்டதா? போட்டோஷூட்டால் வந்த குழப்பம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று 'சத்யா' என்பதும் இதில் விஷ்ணு மற்றும் ஆயிஷா ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

வெட்கச்சிரிப்புடன் பிரபுவின் தோளில் சாய்ந்த குஷ்பு: அருகில் யார் இருக்கிறார் தெரியுமா?

கடந்த 90களில் பிரபு மற்றும் குஷ்பு இணைந்து பல திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது பிரபுவின் தோளில் குஷ்பு சாய்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு': தமிழகத்தில் அதிகாலை காட்சி மட்டும் இத்தனையா?

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

இந்த நபரை சந்திக்க விரும்புகிறேன், யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன்: ராஷ்மிகா மந்தனா 

கடந்த ஆண்டு வெளியான 'புஷ்பா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு பள்ளி சிறுமி ஒருவர் செம டான்ஸ் ஆடி உள்ள நிலையில்