முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரணிதா: இணையத்தில் வைரல்!

  • IndiaGlitz, [Monday,August 01 2022]

சூர்யா மற்றும் கார்த்தியுடன் நடித்த நடிகை ப்ரணிதா சமீபத்தில் குழந்தை பெற்ற நிலையில் முதல் முறையாக அந்த குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சூர்யா நடித்த ’மாஸ்’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். இவர் கடந்த கடந்த ஆண்டு மே மாதம் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு அர்ணா பெயர் வைத்த நடிகை ப்ரணிதா, சற்று முன் முதல்முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். நின்று கொண்டே தூங்கும் குழந்தையின் க்யூட்டான இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.