25 வருடம் செக்யூரிட்டி வேலை பார்த்த கே.பாலசந்தர் நாயகி

  • IndiaGlitz, [Tuesday,September 11 2018]

இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரமிளா. அதன் பின்னர் பல படங்களில் குணசித்திர, வில்லி மற்றும் கவர்ச்சி வேடங்களில் நடித்த பிரமிளா, ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் திரையுலகை விட்டு விலகினார்.

திருமணத்திற்கு பின்னர் அமெரிக்கா சென்ற பிரமிளா அங்கு செக்யூரிட்டி பணிக்கான தேர்வு எழுதி முறையாக பயிற்சி பெற்று தேர்வானார். அமெரிக்காவின் டாலர் அச்சடிக்கும் சென்ட்ரல் வங்கியில் இருந்து டாலர் நோட்டுக்களை ஏற்றிச்செல்லும் டிரக் வண்டியின் செக்யூரிட்டியாக சுமார் 25 வருடங்கள் பிரமிளா பணிபுரிந்துள்ளார்.

கைநிறைய சம்பளம், அன்பான கணவர் என அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்ட பிரமிளா தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும் ஓய்வுக்கு பின்னர் விவசாயம், வேட்டை ஆகியவற்றில் கவனம் செலுத்தி அன்பான கணவருடன் சேர்ந்து வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் பிரமிளா கூறியுள்ளார்.

More News

திருமணத்தை திடீரென நிறுத்திய பிரபல நடிகை

அர்ஜுன் ரெட்டி' பட புகழ் விஜய் தேவரகொண்டா நடித்த 'கீதா கோந்தம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மனைவியுடன் ஜிவி பிரகாஷ் கொடுக்கும் தேன் விருந்து

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியுடன் கொடுக்கவிருக்கும் தேன் விருந்து குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

மும்தாஜூக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ் 1 போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் உள்ள மும்தாஜ், ஐஸ்வர்யாவை விட ஆபத்தானவராகவே கருதப்படுகிறார். அன்பு என்ற ஆயுதத்தை வைத்து ஒவ்வொருவராக கார்னர் செய்து அவர் நடத்திய நாடகம்

ஜெயம் ரவியின் அடுத்த பட இயக்குனர் அறிவிப்பு

தமிழ் சினிமாவின் இளம் நாயகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்த 'டிக் டிக் டிக்' சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றதை அடுத்து அவர் தற்போது 'அடங்க மறு' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சென்றாயனுக்கு சிம்பு கொடுத்த 'மந்திர' புத்தகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக வருவார் என்று மக்கள் எதிர்பார்த்த போட்டியாளர் சென்றாயன். கடந்த வாரம் இவர் மக்களின் எதிர்ப்பை மீறி வெளியேற்றப்பட்டார்.