அசத்தலாக புல்லட்டில் வலம் வரும் அம்மா நடிகை: வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்!

  • IndiaGlitz, [Tuesday,March 16 2021]

பாக்யராஜ் இயக்கி நடித்த ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஆகியவற்றில் புகழ்பெற்ற நடிகை ஒருவர் புல்லட்டில் வலம் வரும் வீடியோவை தனது இன்ஸ்டால் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

’வீட்ல விசேஷங்க’ படத்தின் வெற்றியை அடுத்து ’பெரிய மருது’ ’சிலம்பாட்டம்’ ’எத்தன்’ ’மார்க்கண்டேயன்’ ’சித்து ப்ளஸ் டூ’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரகதி. மலையாளம் மற்றும் தெலுங்கிலும் இவர் பல படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ’அரண்மனைக்கிளி’ உள்ளிட்ட சீரியல்களிலும் அம்மா கேரக்டரில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அவ்வப்போது சமூகவலைதளத்தில் உடற்பயிற்சி குறித்த வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை பிரகதி, தற்போது புல்லட்டில் அசத்தலாக வலம்வரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மிக லாவகமாக அவர் புல்லட்டு ஓட்டும் பாணியே சூப்பர் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரகதி புல்லட் ஓட்டும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து தங்களது கமெண்ட்ஸ் களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது