அன்புச்செழியனை கெட்ட வார்த்தையால் திட்டியது ஏன்? பூர்ணா விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,November 28 2017]

நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமானவர் என்று காவல்துறையினர்களால் தேடப்பட்டு வரும் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு திரையுலகில் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது.

கலைப்புலி எஸ்.தாணு, விஜய் ஆண்டனி, சீனுராமசாமி, தேவயானி, சுந்தர் சி உள்பட பலர் அன்புச்செழியனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அமீர் உள்பட ஒருசிலர் அன்புச்செழியனுக்கு எதிராக கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சசிகுமாரின் 'கொடி வீரன்' படத்தின் நாயகிகளில் ஒருவரான பூர்ணா தனது சமூக வலைத்தள பக்கத்தில் அன்புச்செழியனுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டரில் ஒரு கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தியிருந்தார்

இந்த வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து நடிகை பூர்ணா தற்போது விளக்கம் அளித்துள்ளார். 'எனக்கு அன்புச்செழியனை தனிப்பட்ட முறையில் யார் என்றே தெரியாது. ஆனால் நானும் அசோக்குமாரும் ஒன்றாக பணியாற்றியுள்ளோம். அசோக் குமாரின் திடீர் மரணம் என்னை பெரிதும் பாதித்துவிட்டது. அவரது இறுதிச்சடங்கில் நான் கலந்து கொண்டேன். அப்போது அவரது குடும்பத்தினர்களை பார்த்து கவலை அடைந்தேன். அந்த கோபத்தின் வெளிப்பாடாகத்தான் அந்த வார்த்தையை பயன்படுத்தினேனே தவிர சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல' என்று பூர்ணா கூறியுள்ளார்.

More News

'டிக் டிக் டிக்' படத்தில் இணைந்த இரண்டு இசையமைப்பாளர்கள்

ஜெயம் ரவி நடிப்பில் சக்தி செளந்தராஜன் இயக்கி வரு 'டிக் டிக் டிக்' திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை இசையமைப்பாளர் டி.இமான் அறிவிப்பார்

டிஐஜி ரூபா மீது ரூ.20 கோடி அவமதிப்பு வழக்கு

சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், இதில் ரூ.2 கோடி வரை லஞ்சமாக பெறப்பட்டிருப்பதாகவும் சிறைத்துறை டிஜிபி மீது, பெங்களூர் சிறைத்துறை டிஐஜி ஆக பணிபுரிந்த ரூபா ஐபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.

சசிகுமாரின் 'கொடிவீரன்' ரிலீஸ் தேதி மாற்றம்

'கொடிவீரன்' திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி புரமோஷன்களும் ஜோராக நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த படம் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுருந்தது

தேர்தலுக்கு பின் தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் விஷால் அணி அமோக வெற்றி பெற்றது.

அஜித், விஜய் ஆசானுக்கு கிடைத்த புதிய பதவி

தமிழகர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று சிலம்பக்கலை. இன்றும் கிராமங்களில் திருவிழாவின்போது சிலம்பச்சண்டை ஒரு முக்கிய பகுதியாக இடம்பெறும்.