நடிகை பூர்ணா வீட்டுக்கு வந்த புது உறவு.. முதல் நாளே புகைப்படம் வெளியிட்டு அசத்தல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை பூர்ணா கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது அவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக குறிப்பிட்டு முதல் நாளே குழந்தையின் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பிறகு ’தகராறு’ ’காப்பான்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. அவர் துபாய் தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் போது பல போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து இருந்தார் என்பதும் குறிப்பாக வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து நாங்கள் ஒரு ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆகியுள்ளோம் என்றும் எங்களுக்கு பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனது குழந்தையை புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த குழந்தைக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com