திருமண அறிவிப்பை வெளியிட்டார் நடிகை பூர்ணா: மாப்பிள்ளை யார் தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,June 01 2022]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வரும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையிலும் மற்றொரு தமிழ் நடிகை பூர்ணா தனது திருமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இதன் பின்னர் ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். சூர்யா நடித்த ’காப்பான்’, திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை பூர்ணா தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் தனது வருங்கால கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகை பூர்ணாவின் வருங்கால கணவர் பெயர் சானித் ஆசிப் அலி. இவர் துபாயில் தொழிலதிபராக உள்ளார். சானித் ஆசிப் அலி.- பூர்ணா திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.